Tamil Bayan Points

குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றது!

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

Last Updated on March 10, 2022 by

298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ رواه الترمذي

குபா பள்ளிவாசலில் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸைத் பின் லுஹைர் (ரலி),

நூல் : திர்மிதீ (298)

இதே கருத்தில் இப்னுமாஜா (1401), பைஹகீ (பாகம் :5, பக்கம் : 248), ஹாகிம் (பாகம் :1, பக்கம் : 662), தப்ரானீ கபீர், பாகம்:1, பக்கம் : 210),ஸுனன் ஸு க்ரா- பைஹகீ (பாகம் :4, பக்கம் :423), முஸ்னத் அபீயஃலா, பாகம் :13, பக்கம் : 90), முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் :2, பக்கம் :373) ஷ‚அபுல் ஈமான்- பைஹகீ, பாகம் :6, பக்கம் : 67) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கருத்து இடம்பெறும் அனைத்து செய்திகளிலும் அபுல் அப்ரத் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என்று இந்தச் செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் ஹாகிம் அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் போன்று இமாம் தஹபீ அவர்கள் தீவானுல் லுஅஃபா (பாகம் :1, பக்கம் : 149) என்ற நூ-லி லும் இவர் யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே இந்தச் செய்தி யாரென அறியப்படாதவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.