Tamil Bayan Points

கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் விற்பது கூடுமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் விற்பது கூடுமா?

மற்றவர்கள் புனிதம் என்று கருதும் பொருட்களை தவிர மற்றவற்றை விற்கலாம்.

மாற்று மதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.

13971حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ عَطَاءً كَتْب يَذْكُرُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَنَازِيرِ وَبَيْعَ الْمَيْتَةِ وَبَيْعَ الْخَمْرِ وَبَيْعَ الْأَصْنَامِ رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பன்றிகளை விற்பது இறந்தவற்றை விற்பது மதுவை விற்பது சிலைகளை விற்பது ஆகியவற்றை தடைசெய்துவிட்டனர். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்.

நூல் : அஹ்மது (13971)

சிலைகளை விற்பனை செய்வது கூடாது என இந்த ஹதீஸ் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் இவற்றை வணங்கிவந்த காரணத்துக்காகவே இவற்றை விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பொருளில் அதில் உள்ள தன்மையைத் தாண்டி வெறோரு தெய்வீகத் தன்மை இருப்பதாக மக்கள் நம்பினால் அந்தப் பொருளும் சிலையுடைய அந்தஸ்துக்கு வந்துவிடும்.

ஏனைய மக்களால் புனிதப் பொருளாக கருதப்படும் பொருட்களை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இதை விற்பதே தடைசெய்யப்பட்டுள்ளது.

கிரிஸ்தவர்கள் கிரிஸ்துமஸ் பண்டிகையின் போது பயன்படுத்தும் பொருட்களான பலூன் லைட் செட் கிரிஸ்துமஸ் மரம் போல் பெல் ஆகியவற்றை அவர்கள் வணங்கவில்லை. இதில் புனிதம் இருப்பதாக அவர்கள் நம்பவுமில்லை.

மேலும் இப்பொருட்கள் மத விழா அல்லாத வேறு நிகழ்சிகளுக்கும் பயன்படக்கூடியவையாக இருக்கின்றன. இப்பொருட்களை அவர்களுக்கு விற்பதால் நாம் தீமைக்கு துணைபோனதாகவும் ஆகாது. இவற்றை இலவசமாகவோ அல்லது இவ்விழாவிற்காக விலையில் சலுகை செய்தோ கொடுத்தோல் அப்போது தான் தீமைக்கு துணைபோன குற்றம் ஏற்படும். எல்லா பொருட்களையும் விற்பது போல் இவற்றையும் விற்றால் அதில் தவறேதுமில்லை. எனவே இதை விற்பனை செய்வதை தவறு என்று கூற முடியாது.