Tamil Bayan Points

காற்றில் பறக்கும் இந்திய அரசின் பாதுகாப்பு!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on May 30, 2019 by

 காற்றில் பறக்கும் இந்திய அரசின் பாதுகாப்பு!

அனைத்தையுமே டிஜிட்டல் மயமாக்கி புதிய இந்தியாவை உருவாக்கப் போகின்றோம் என பீற்றிக் கொள்ளும் மோடியின் சாயம் நாளுக்கு நாள் வெளுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12.02.17 ஞாயிற்றுக் கிழமை அன்று மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. 12.02.17 அன்று காலை இந்த இணையதளம் திடீரென முடக்கப்பட்டது.

உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிக்கைகளும், தகவல்களும் வெளியாவதும் அந்த பக்கத்தில்தான் அந்த இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றது. இந்த இனையதளப் பக்கம் முடக்கப்பட்டது குறித்து குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் 700 க்கும் மேற்ப்பட்ட இணையதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா. மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இணையதளத்தையே பாதுகாக்க துப்பில்லாத நிலையில், கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட தடவை மத்திய அரசாங்கத்தின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசாங்கத்தின் உள்துறை செய்திகளுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது; ராணுவ ரகசியங்களுக்கு என்ன பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது? என்பதை டிஜிட்டல் இந்தியாவின்(?) டிஜிட்டல் பிரதமர் விளக்குவாரா?

இணையதளத்தின் பக்கம் முடக்கப்படும் போது அதில் இவர்களாகவே மத்திய அரசின் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு கூடுதல் நேரம் ஆகாது. அதுமட்டுமல்லாமல், இது தேசத்தின் பாதுகாப்பிற்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த லட்சணத்தில் அனைத்தையுமே டிஜிட்டல் மயமாக ஆக்கப்போவதாக மோடி பீற்றி வருகின்றார். இந்த ரீதியிலும் விசாரணையை முடுக்கிவிட்டால் உண்மை வெளிவரும்.

Source : unarvu ( 17/02/17 )