Tamil Bayan Points

03b) உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.?

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

Last Updated on September 19, 2023 by Trichy Farook

உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.?

உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்:

إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

இன்னல்ஹம்(d)த லில்லாஹ், நஹ்ம(d)துஹு, வநஸ்தஈநுஹ். மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ள லஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலஹ், வ அஷ்ஹ(d)து அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்(d)தஹூ லா ஷரீ(k)க லஹ், வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹூ வரசூலுஹ்.

(பொருள்: நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம்.

யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை.

இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை. மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்)

அறி: இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி) 
நூல்கள்: அஹ்மத்-27493275 , முஸ்லிம்-3275இப்னு மாஜா-1892 , திர்மிதீ-1105 ,


இதுபோன்ற வேறு சில வார்த்தைகள், இவற்றையும் பயன்படுத்தலாம்:

إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ، فَلا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِل، فَلا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
இன்னல்ஹம்(d)த லில்லாஹ், நஸ்தஈநுஹு வ நஸ்தஃக்ஃபிர்ஹ், வ நஊ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ள லஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹா(d)திய லஹ், வ அஷ்ஹ(d)து அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்(d)தஹூ லா ஷரீ(k)க லஹ், வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹூ வரசூலுஹ்.
(நூல்: அஹ்மத்-2749
إِنَّ الحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
இன்னல்ஹம்(d)த லில்லாஹ், நஸ்தஈநுஹு வ நஸ்தஃக்ஃபிர்ஹ், வ நஊ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா, வ ஸய்யிஆதி அஃமாலினா, ஃபமய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ள லஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதிய லஹ், வ அஷ்ஹ(d)து அல்லாஇலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹூ வரசூலுஹ்.
(நூல்: திர்மிதீ-1105

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

யா அய்யுஹன்னாஸ், இத்த(q)கூ ர(b)ப்ப(k)குமுல்ல(d)தீ(kh)ஹல(q)க(k)கும் மின் நஃப்ஸிவ் வாஹி(d)தஹ், வ(kh)ஹல(q)க மின்ஹா ச(z)வ்ஜஹா, வ பஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கசீரவ் வ நிஸாஆ, வத்த(q)குல்லாஹல்ல(d)தீ (th)தஸாஅலூன (b)பிஹீ வல்அர்ஹாம், இன்னல்லாஹ கான அலைக்கும் ர(q)கீ(b)பா.

(அல்குர்ஆன்: 4:01)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ, இத்த(q)குல்லாஹ ஹ(q)க்க (th)து(q)காத்திஹ், வலா (th)தமூ(th)துன்ன இல்லா வஅன்(th)தும் முஸ்லிமூன்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

(அல்குர்ஆன்: 3:102)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ, இத்த(q)குல்லாஹ், வ(q)கூலூ (q)கவ்லன் ஸ(d)தீ(d)தா, யுஸ்லிஹ் ல(k)கும் அஃமால(k)கும் வ யஃக்ஃபிர்ல(k)கும் (d)துநூப(k)கும், வமை யு(th)திஇல்லாஹ வரசூலஹூ, ஃப(q)கத் ஃபா(z)ஸ ஃபவ்(z)சன் அழீமா.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

(அல்குர்ஆன்: 33:70)

إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

இன்ன அஸ்(d)த(q)கல் ஹ(d)தீஸி கி(th)தா(b)புல்லாஹ், வ அஹ்ஸனல் ஹ(d)த்யி ஹ(d)த்யு முஹம்ம(d)தின்) ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்(, வஷர்ருல் உமூரி முஹ்(d)தசாத்துஹா, வ குல்லு முஹ்(d)தச(th)திம் பி(d)த்அஹ், வ குல்லு பி(d)த்அத்தின் ழளாலஹ், வ குல்லு ழளாலத்தின் ஃபின் நார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறி: ஜாபிர் (ரலி)
நூல்: நஸாயீ-1578 (1560)