Tamil Bayan Points

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் – 7

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on December 29, 2016 by Trichy Farook

முன்னுரை

இஸ்லாத்தின் சிறப்புகளைக் கூறும், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தொடர் உரையில், நம்மை பங்கு பெறச் செய்த இறைவனுக்கே புகழனைத்தும் உரியது!

மரணப் படுக்கையின் போது….

உலகில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்; மறைந்திருக்கிறார்கள். அந்தத் தலைவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலோ அல்லது பொது வாழ்க்கையிலோ உள்ள அனைத்துச் செயல்பாடுகளும் பதிவாகவில்லை. ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பதியப்பட்டுள்ளது. காரணம், அவர்கள் அல்லாஹ்வின் தூதர்! அதுவும் இறுதித் தூதர் என்பதால் அவர்களுடைய எல்லா செயல்பாடுகளும் பதிவாகி விட்டன.

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானிடம், அவர் பல் துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் “தம் கையை’ அல்லது “தம் விரலை’ உயர்த்திப் பிறகு, “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4438

மரணப் படுக்கையின் போதும் அந்தத் தலைவர் பல் துலக்கும் பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்.

“பல் துலக்குவது தொடர்பாக நான் உங்களுக்கு அதிகமாக வலிறுத்தியிருக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 888

பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இங்கு கூறுகின்றார்கள்.

எனது சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்களைப் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 887

ஒவ்வொரு தொழுகையின் போதும், அதாவது ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து வேளையாவது தமது சமுதாயத்தினர் பல் துலக்க வேண்டும் என்பது அவர்களது ஆர்வம்; அவா!

இப்படி எந்த ஒரு தலைவரேனும் தம் சமுதாயத்திற்கு, பல் துலக்கலைப் பற்றிப் பாடம் நடத்தியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அப்படி நடத்த வேண்டிய அவசியமும் இல்லை! ஆனால் இந்தத் தலைவர் மட்டும் இப்படிப் பாடம் நடத்துகிறார்களே! அது ஏன்?

அவர்கள் இயற்கை மார்க்கத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர். அதனால் பால் நிறப் பற்களை சரியாகப் பராமரிக்கச் சொல்கிறார்கள்.

இன்று அறிவியல் சொல்கிறது: மனிதன் ஒரு நாளைக்கு, காலையில் எழுந்ததும், இரவில் படுக்கும் போதும், சாப்பிட்ட பிறகும் பல் துலக்க வேண்டும். ஏனெனில் மனிதன் சாப்பிட்ட உணவின் துகள்கள், குறிப்பாக இனிப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் பற்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றிலிருந்து சில பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகள் வாழத் துவங்கி விடுகின்றன.

வாய்க்குள் ஆக்ஸிஜன் கிடைக்காத போது அவை அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம், பல் எனாமலில் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸைக் கரைத்து விடுகின்றது. இதற்கு உங்ம்ண்ய்ங்ழ்ஹப்ண்ள்ஹற்ண்ர்ய் – கனிமச் சத்து அரிமானம் என்று பெயர். இது தான் பற்சிதைவுக்கு வழிவகுக்கின்றது.

நாவில் ஓடும் உமிழ் நீர் இதை ஓரளவுக்குச் சரி செய்கிறது. ஆனால் அதே சமயம் பாக்டீரியாக்கள் கொத்தாக பற்களில் படிமானத்தை ஏற்படுத்தி விட்டால் இந்த உமிழ் நீர் அதற்குள் ஊடுறுவ முடியாது. அப்போது பல்லைச் சிதைத்து வலியை ஏற்படுத்தும். அத்துடன் நிற்பதில்லை. நேரடியாக மூளையைப் பாதித்து விடுகின்றது. மனிதன் மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது. இது பற்கள் மூலம் ஏற்படும் அதிகப்பட்ச பாதகம்!

வாய் துர்நாற்றம்

பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களில் குடித்தனம் நடத்தும் நுண்ணுயிரிகள் தான் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்மிடம் பேசுவோர் முகத்தைத் திருப்பிக் கொள்ள நேரிடுகிறது.

அது மட்டுமின்றி ஈறுகள் தொற்று நோய்க்குள்ளாகி இரத்தம் கசியவும், சீழ் வழியவும் ஆரம்பித்து விடுகிறது. இந்நோய்க்கு பயோரிய்யா என்று பெயர். இது பற்களால் ஏற்படும் குறைந்த பட்ச பாதகமாகும்.

இதனால் தான் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதில் இவ்வளவு கவனம் எடுத்துள்ளார்கள். தமது சமுதாயத்தையும் இதில் கவனம் எடுக்கச் சொல்கிறார்ôன்ற பற்களைப் பாழாக்காதீர்!

 

இன்னும்  ஏராளமான அம்சங்கள் இஸ்லாம் ஒர் இயற்கை மார்க்கம் தான் என்பதனை பறை சாற்றுகின்றன. அடுத்தடுத்த உரைகளில் அவற்றை வரிசையாக காண்போம், இன்ஷா அல்லாஹ்!