Tamil Bayan Points

இமாம் இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் என்ன ஓத வேண்டும்?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 4, 2017 by Trichy Farook

இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது நாம் ஜமாஅத்தில் சேர்ந்தால் என்ன ஓத வேண்டும்?
? இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது நாம் வந்து சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா?

எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி

தொழுகையில் இமாம் என்ன நிலையில் இருக்கின்றாரோ அதே நிலையைத் தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது.

 

وَقَدْ أَخْرَجَهُ أَبُو دَاوُد مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُنَا – الْحَدِيثَ. وَفِيهِ أَنَّ مُعَاذًا قَالَ ” لَا أَرَاهُ عَلَى حَالٍ إلَّا كُنْت عَلَيْهَا ” وَبِهَذَا يَنْدَفِعُ الِانْقِطَاعُ إذْ الظَّاهِرُ أَوْ الرَّاوِي لِعَبْدِ الرَّحْمَنِ غَيْرُ مُعَاذٍ بَلْ جَمَاعَةٌ مِنْ الصَّحَابَةِ وَالِانْقِطَاعُ إنَّمَا اُدُّعِيَ بَيْنَ عَبْدِ الرَّحْمَنِ وَمُعَاذٍ قَالُوا؛ لِأَنَّ عَبْدَ الرَّحْمَنِ لَمْ يَسْمَعْ مِنْ مُعَاذٍ وَقَدْ سَمِعَ مِنْ غَيْرِهِ مِنْ الصَّحَابَةِ وَقَالَ هُنَا ” أَصْحَابُنَا “، وَالْمُرَادُ بِهِ الصَّحَابَةُ – رَضِيَ اللَّهُ عَنْهُمْ -، وَفِي الْحَدِيثِ دَلَالَةٌ عَلَى أَنَّهُ يَجِبُ عَلَى مَنْ لَحِقَ بِالْإِمَامِ أَنْ يَنْضَمَّ إلَيْهِ فِي أَيِّ جُزْءٍ كَانَ مِنْ أَجْزَاءِ الصَّلَاةِ فَإِذَا كَانَ الْإِمَامُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும் போது தாமதமாக வரும் நபித்தோழர்கள் தொழுகையைத் துவக்கத்தில் இருந்து தொழுவார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் ஒவ்வொருவரும் ஒரு நிலையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது முஆத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) எந்த நிலையில் இருப்பார்களோ அந்த நிலையில் நான் சேர்ந்து கொள்வேன் எனக் கூறி அவ்வாறு செய்யலானார். இதைக் கண்ட நபியவர்கள் முஆத் ஒரு முறையைக் காட்டித் தந்துள்ளார். அதையே நீங்கள் என் வழிமுறையாக எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். இதை எனக்கு நபித்தோழர்கள் அறிவித்தனர் என்று அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.

அபூதாவூத் (சுருக்கம்)

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார் என்பதை வலியுறுத்தும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவையனைத்துமே இமாம் எந்த நிலையில் உள்ளாரோ அதைத் தான் தாமதமாக வருபவரும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியுள்ளன.