Tamil Bayan Points

இதய நோயிலிருந்து காக்கும் திருமணம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 2, 2019 by

இதய நோயிலிருந்து காக்கும் திருமணம்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பால் கார்ட்டர் மற்றும் அஷ்டன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இங்கிலாந்து நாட்டில் உயர்ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். 14 ஆண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் நடந்த இதயநலம் குறித்து நடந்த சர்வதேச மாநாட்டில் அவர்கள் வெளியிட்டனர்.

அதில் ‘அதிக கொழுப்பு இருந்த 50, 60, 70 வயதான ஆண் மற்றும் பெண்களில் தனியாக வாழ்பவர்களை விட திருமணமானவர்கள் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள். அதுபோல் நீரிழிவு, உயர்ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப் பட்டவர்களில் திருமணமானவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர். கொழுப்பு மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட பெரும் இதய நோய் காரணிகளுக்கு எதிராக உடல்நலத்தை தாங்கும் சக்தியாக திருமணம் இருக்கிறது. மாரடைப்பிலிருந்து   தப்பித்து உயிர் வாழ்வதற்கும், திருமணத்திற்கும் தொடர்பு இருக்கிறது’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற மதங்களில் பிரம்மச்சாரியம் போற்றப்படுகிறது.

இஸ்லாத்தில் இது இழிவாக பார்க்கப் படுகிறது. திருமணம் செய்து கொள்ளாத துறவு நிலையை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை என்பதோடு, அதை கடுமையாக கண்டிக்கவும் செய்கிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘திருமணம் – எனது வழிமுறை. என்றார்கள். திருமண வாழ்க்கை கேடு பயப்பதாக இருந்தால் இறைவனே அதை தடுத்திருப்பான். அவ்வாறு தடுக்காமல் திருமணத்தை அவசியமாக்கியதின் நோக்கத்தை இப்போது மனித குலம் ஆய்வின் மூலம் அறிந்து வருகிறது. இறைவன் அனுமதித்த திருமணம் தான் ஆரோக்கியமானது. அவன் தடுத்த எல்லாமே ஆரோக்கிய கேடு என்பதை மனிதர்கள் புரிந்து, துறவறத்தை புறக்கணித்து, திருமணத்தை ஏற்று, நல்வாழ்வு வாழ முற்பட வேண்டும். சரிதானே!

source:unarvu (23/06/17)