Tamil Bayan Points

ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 120

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 8, 2019 by

ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 120

புளும்பெரிக் என்ற அமைப்பு ஆரோக்கிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ஸ்பெயினும், இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும், நான்காவது இடத்தில் ஜப்பானும், ஐந்தாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்த்தும் இடம் பிடித்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனா, 52-வது இடத்திலும் இலங்கை 66-வது இடத்திலும், வங்கதேசம் 91-வது இடத்திலும், நேபாளம் 110-வது இடத்திலும் வந்துள்ளன.

இதில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? 120-வது இடமாகும். மோடி தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ் வீடு தோறும் கழிப்பறைக் கட்டிக் கொடுக்கப்பட்டன’ என்றார். இவர் கூறியது உண்மை என்றால் ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா எவ்வளவோ முன்னேறி இருக்க வேண்டும். ஆனால் முன்னேறவில்லை.

கடந்த ஆண்டு இந்த அமைப்பு வெளியிட்ட ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் 119-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஒரு இடம் சரிந்து 120-வது இடத்திற்கு போயுள்ளது. இதன் மூலம் மோடி அரசின் தூய்மை இந்தியா திட்டம் வெற்று விளம்பரத் திட்டம் என நிருபனம் ஆகியுள்ளது. மோடி அரசால் பிரம்மாண்டப் படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டமே சொதப்பி விட்டது எனில் இந்த அரசின் மற்ற திட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை தானே!

இந்த நிலையில் நாளுக்கொரு விளம்பரம் செய்து, அரசியல் ஆதாயம் தேட மோடி அரசு முயற்சிக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விளம்பரத்தைப் பார்த்து மக்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு பதிலாக மோடி அரசின் திட்டத்தால் தனக்கும், தனது குடும்பத்துக்கும் என்ன பயன் கிடைத்தது என எண்ணிப் பார்த்தால் மோடி அரசின் பித்தலாட்டம் நன்கு விளங்கும். இந்த பித்தலாட்டத்தை புளும்பெரிக் போன்ற அமைப்புகள் புள்ளி விவரங்கள் மூலம் வெளியிடுவது மக்களை விழிப்படையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

Source:unarvu ( 08/03/2019 )