Tamil Bayan Points

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on September 21, 2023 by

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ,

வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா

நபி (ஸல்) அவர்கள், ஸுப்ஹு தொழுகையில் ஸலாம் கூறிய பின்பு “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா” என்று கூறுவார்கள்.

(பொருள் : யா அல்லாஹ்! பயன்தரக்கூடிய கல்வியையும், ஹலாலான-தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்கப்படும் நற்செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்)

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல் : இப்னுமாஜா-925

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ مَوْلًى لِأُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: إِذَا صَلَّى الصُّبْحَ حِينَ يُسَلِّمُ «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا»

இதன் அறிவிப்பாளர்தொடரில், உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் அடிமை யார் என்பது பற்றி எந்த நூலிலும் குறிப்பு இல்லை என்பதால் இவர் அறியப்படாதவர் என்ற தரத்தில் உள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.