Tamil Bayan Points

அற்புதப் பெருவிழா பொய்: நிரூபித்த போப்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 1, 2019 by

அற்புதப் பெருவிழா பொய்: நிரூபித்த போப்

மரபணுக் கோளாறு காரணமாக மூளைச் செல்கள் சாவு ஏற்படுகின்றன. இந்த மூளைச்சாவை வழி நடத்துகின்ற நோயை ஹண்டிங்டன்ஸ் என்று அழைக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப் பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரை நேரில் சந்தித்தபோது அவர்களை போப் ஆண்டவர் ஆறுதல் படுத்தித் தேற்றினார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இப்படி போப் ஆண்டவர் ஆறுதல் சொன்னாரே தவிர இவர்களின் நோயை குணமாக்கி விடுவேன் என்றோ, அதற்கான சக்தி தனக்கு இருப்பதாகவோ சொல்லவில்லை. ஊருக்கு ஊர் ஜெபக் கூட்டம் நடத்தும் கிறிஸ்தவ உபவாசகர்கள் குருடரை பார்க்க வைக்கிறோம், செவிடரை கேட்க வைக்கிறோம், ஊமையைப் பேச வைக்கிறோம் எனக் கூறி பொய்மையை விதைக்கின்றனர். இதை யெல்லாம் செய்ய முடியாது என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போப் பிரான்சிஸ். போப் பிரான்சிக்கு முன்னால் போப்பாக இருந்தால் போப் ஜான்பால்.

வயதில் முதிர்வின் காரணமாக நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ள இவர், இதற்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிடுகிறாரே தவிர, அற்புதம் செய்து, தனது நோயை குணமாக்க வில்லை. தற்போது போப் ஆண்டவராக இருக்கும் பிரான்சிஸிம் முன்னால் போப் ஆண்டவரின் நோயை குணமாக்கிறேன் எனக் கிளம்பவில்லை. அற்புதப் பெருவிழா நடத்தி, நோயை குணமாக்குகிறேன் என்று சொல்பவர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இது கிறிஸ்தவ நிறுவனத்தால் நடத்தப் படுகிறது. அற்புதத்தால் நோயை குணமாக்க முடியும் என்று இருந்தால் இவர்கள் இந்த மருத்துவக் கல்லூரியை நடத்துவார்களா? மரணத்திற்குப் பிறகு இரண்டு நோயாளிகளை குணப்படுத்தினார் எனச் சொல்லி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப் பட்டுள்ளது. அன்னை தெரசா உயிரோடு இருந்தவரை தொழு நோயாளிகள் உட்பட அனைவருக்கும் சேவை செய்தாரே தவிர நோய்களை குணமாக்கும் சக்தி எனக்கு இருக்கிறது என்று சொல்லி எந்த நோயையும் குணமாக்கவில்லை.

இப்படி உயிரோடு இருந்த போது எந்த நோயையும் குணப்படுத்தாத அன்னை தெரசா இறந்த பிறகு எப்படி நோயாளிகளை குணப்படுத்த முடியும்? அற்புதத்தால் நோயை குணமக்குகிறேன் என்று சொல்லி தமிழகம் முழுவதும் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர் தினகரன். இவர் கடைசிக் காலத்தில் தனது நோய்க்காக மருத்துவமனையில் போய் தஞ்சம் புகுந்தாரே தவிர, ஜெபத்தின் மூலம் தனது நொயை குணமாக்கிக் கொள்ள முடியவில்லை.

இப்படி நடந்து ஜெபத்தின் மூலம் நோயை குணமாக்குகிறேன் என்று தனது நிகழ்ச்சி அனைத்தும் பெரிய பித்தலாட்டம் என நிருபித்தார். சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, அன்னை தெரசா நடத்திய மருத்துவ சேவை நிறுவனங்கள், கோவையில் உள்ள காருண்யா கல்லூரி ஆகிய கிறிஸ்தவ நிறுவனங்கள் அனைத்தும் அற்புதம் மூலமோ, ஜெபத்தின் மூலமோ நோயை குணமாக்க முடியாது. இப்படி கிறிஸ்தவ உபவாசகர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம் பொய் என நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன.

ஹன்டிங்டன்ஸ் நோய் பாதித்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்ன போப் பிரான்சிஸ்ஸின் செயல்களும் இதையே பறைசாற்றில் கொண்டிருக்கிறது. எனவே மருத்துவ சேவை ஆற்றிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ நிறுவனங்கள் அற்புதம் செய்கிறோம்; ஜெபத்தின் மூலம் நோயை குணப்படுத்துகிறோம் என்று செய்யும் பிரச்சாரத்தை கைவிட வேண்டும். அல்லது அற்புதப் பெருவிழாவை மருத்துவமனைகளில் நடத்தி, நோயாளிகளின் நோயை குணப்படுத்தி, மருத்துவ சேவை நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்றை அவர்கள் செய்யவேண்டுமேயல்லாது ம ய ல் ல இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து மக்களை ஏமாற்றக் கூடாது. இதை இவர்கள் புரிந்து நடந்து கொள்ள முன் வருவார்களா?

Source: unarvu ( 26/05/17 )