Tamil Bayan Points

அரசியல்

நூல்கள்: திருக்குர்ஆன் பொருள் அட்டவணை

Last Updated on December 8, 2019 by

அரசியல்

ஆட்சிமுறை ஆட்சியை வழங்குவது இறைவனின் அதிகாரம் – 2:247, 3:26, 5:54, 7:128, 59:6

பரம்பரை ஆட்சி – 27:16

ஆட்சியாளர் இறைவனால் நியமிக்கப்படுதல் – 2:246

பருவமடையும் வயது – 4:6

ஓட்டுப் போடுதல் – 4:85

ஆட்சித் தலைமைக்கு பண வசதி ஒரு தகுதியில்லை – 2:247

ஆட்சியாளருக்கு அறிவு அவசியம் – 2:247

ஆட்சியாளருக்கு வலிமை அவசியம் – 2:247

ஆட்சி அமைப்பது நபியின் வேலையல்ல – 2:246, 2:247, 12:55

ஆட்சியாளரின் பண்புகளும், கடமைகளும் ஆட்சியாளர்கள் மென்மையாக அணுக வேண்டும் – 3:159

ஆட்சியாளர் வெளியே செல்லும்போது மற்றவரை நியமித்தல் – 7:142, 20:92

நியமிக்கப்படும் பிரதிநிதியை ஆட்சியாளர் கண்டித்தல் – 7:150, 20:94

ஆட்சியாளரிடம் பணிவு – 15:88, 17:24, 26:215

ஆலோசனை செய்தல் – 3:159, 42:38,

பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் ஏற்படுத்துதல் – 12:55

நிரபராதியைச் சிறையில் அடைத்த ஆட்சியாயினும் அந்த ஆட்சியில் பதவியைப் பெறலாம் – 12:55

அந்நிய நாட்டவர் விரும்பினால் அவரது நாட்டுச் சட்டத்தை அவருக்கு அமுல்படுத்துதல் – 12:75,76

இறைத்தூதர் அல்லாதவரின் சட்டங்களை இறைத்தூதர் அமுல்படுத்துதல் – 12:76

இறைத்தூதர் இன்னொருவரை ஆட்சியாளராக ஏற்பது – 2:246,247, 12:76

அனைவருக்கும் சமநீதி, சம உரிமை – 2:80,81, 2:199, 3:75, 4:1, 5:18

நகரங்களை அமைத்தல் – 10:87

கொலையாளியை மன்னிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை – 2:178, 17:33

வசதி படைத்தோர்க்காக ஏழைகளை இழக்கலாகாது – 6:52, 11:29,30, 18:28

தனி மனித இரகசியம் பேணல் – 24:27, 24:28, 24:58, 24:59

குற்றம் செய்தவன் மட்டுமே குற்றத்துக்கு பொறுப்பாளி – 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38

கலவரங்களைத் தடுத்தல் – 2:251, 22:40, 49:9

ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தை ஏச அனுமதிக்கலாகாது – 6:108

சூதாட்டத்திற்குத் தடை – 2:219, 5:90, 5:91

மதுவுக்குத் தடை – 2:219, 5:90, 5:91

அடைக்கலம் தேடுபவர்க்கு அடைக்கலம் – 9:6

மக்கள் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிக்கக் கூடாது – 2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 23:71, 25:43, 38:26, 42:15, 45:18

மன்னனிடத்தில் உணவையும், வசதிகளையும் கேட்டுப் பெறுதல் – 12:88

தகுதியுடையவர் பதவியைக் கேட்டுப் பெறுதல் – 12:55

முஸ்லிமல்லாத ஆட்சியாளரிடம் உரிமையைக் கேட்பது – 7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18 அடக்குமுறையாளருக்கு அடிபணியலாகாது – 11:59

தீயவழி செல்லும் அரசனுக்குக் கட்டுப்படலாகாது – 43:54

தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் – 4:59

இஸ்லாமிய ஆட்சி இல்லாதபோது பிற சட்டங்களுக்குக் கட்டுப்படுதல் – 12:76

வதந்திகளைப் பரப்பக் கூடாது – 4:83

முஸ்லிமல்லாத ஆட்சியில் பதவி வகித்தல் – 12:55

உயிர் வாழும் உரிமை – 2:178, 2:179, 4:93, 5:32, 5:45, 6:151, 25:68

தற்கொலைக்கு உரிமையில்லை – 2:195, 4:29

குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை – 6:137, 6:140, 6:151, 81:8

பெண் குழந்தைக்கு உயிர் வாழும் உரிமை – 16:58,59, 81:8, 16:97, 42:49, 53:45, 75:39, 92:3

சொத்துரிமை – 4:7, 4:11, 4:12, 4:32,33, 4:176, 8:75,

பெண்களுக்குச் சொத்துரிமை – 4:32

பொருள் திரட்டும் உரிமை – 2:198, 4:32, 16:14, 17:12, 17:66, 28:73, 30:46, 35:12, 45:12, 62:10

பாதிக்கப்பட்டவன் தீய சொற்களைப் பேச அனுமதி – 4:148

சீட்டுக் குலுக்கிப் போடுதல் – 3:44

முஸ்லிமல்லாதோருடன் உறவு முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்கத் தடை – 3:28, 3:118, 3:119, 3:120, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23, 60:1, 60:2

முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்க அனுமதி – 5:2, 5:8, 5:57, 9:6, 60:8, 60:9

ஹிஜ்ரத் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க இயலாவிட்டால் ஹிஜ்ரத் – 4:97

பூமி விசாலமாக இருந்தால் தான் ஹிஜ்ரத் – 4:97

எந்த நாடும் ஏற்க முன்வரா விட்டால் ஹிஜ்ரத் இல்லை – 4:97

பலவீனர்களுக்கு ஹிஜ்ரத் அவசியமில்லை – 4:98

வாய்ப்பு இருந்தால் ஹிஜ்ரத் – 4:97, 4:100

நல்லோருக்கும் தோல்வி – 2:155, 2:214, 3:140, 3:142, 3:166,167, 3:186

கெட்டவர்களுக்கு நல்வாழ்க்கை – 3:178, 3:196, 3:197, 10:88, 23:55,56, 28:76, 28:81, 31:24, 40:4

போர்

போருக்கு ஆட்சி அவசியம் – 2:247, 2:248, 4:75

போருக்கான படைபலம் – 8:65,66

அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் – 4:75, 22:39-40

வம்புச் சண்டைக்கு வருவோருடன் போர் – 2:190, 8:19, 9:13

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் போர் – 2:191, 22:39,40

உடன்படிக்கையை முறித்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவோருடன் போர் – 9:12

கலகக்காரர்களுடன் போர் – 4:91

போரை முதலில் துவக்கக் கூடாது – 2:190, 9:13

சமாதானத்துக்கு வருவோருடன் போர் இல்லை – 2:192, 4:90, 4:94, 8:61

மதத்தைப் பரப்ப போர் இல்லை 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22

விலகிக் கொள்வோருடன் போர் இல்லை – 2:192,193, 8:39

அல்லாஹ்வின் பாதையில் (நியாயத்துக்கு) மட்டுமே – 2:190, 2:244, 3:13, 3:146, 3:167, 4:74, 4:75, 4:76, 4:84, 9:111

போர் செய்யும் அவசியம் ஏற்பட்டால் போர் கடமை – 2:216

எதிரியின் படை பலத்தைக் கண்டு அஞ்சக்கூடாது – 2:249, 8:19

சோர்வடையக் கூடாது – 3:173

புனித மாதங்களில் போர் கூடாது – 2:194, 2:217, 5:2, 9:5, 9:36

மஸ்ஜிதுல் ஹராமை போர்க்களமாக ஆக்கக் கூடாது – 2:191

போர்க்களத்தில் இரக்கம் கூடாது – 2:191, 8:57, 47:4

போர்க்களத்தில் புனிதங்களைப் பேண வேண்டும் – 2:190, 2:191, 2:193, 2:194

வெளியேற்றியவர்களை வெளியேற்றலாம் – 2:191

புனிதங்களை மதிப்பது ஒரு தரப்பானது அல்ல – 2:191, 2:194

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகவே போர் – 4:75, 22:39

உயிர் தியாகிகளின் சிறப்பு – 2:154, 3:169, 4:74, 36:26

பலத்தைத் தயாரித்துக் கொள்வது – 8:60

புறங்காட்டக் கூடாது – 8:15

தயாரிப்புக்காக புறங்காட்டலாம் – 8:16

நீதியை நிலைநாட்டுதல் குற்றவாளிகள் என்று தெரிந்தால் அவருக்காக வக்கீல்கள் வாதாடலாமா? – 4:105

ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நீதி – 4:135

எதிரிகளுக்கும் நீதி செலுத்துதல் – 5:2, 5:8, 5:42, 60:8

நீதி செலுத்துதல் கட்டாயக் கடமை – 7:29, 16:90, 42:15

நீதியாக சமரசம் செய்தல் – 49:9

உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது – 4:135, 6:152

நீதியை நிலைநாட்ட வேண்டும் – 4:58, 4:135, 5:8, 5:42, 6:152, 7:29, 16:76, 16:90, 42:15, 49:9

நீதி வழங்கும்போது மன இச்சையைப் புறக்கணித்தல் – 4:135

சாட்சியம் இரு ஆண்கள் கிடைக்காதபோது ஒரு ஆணும், இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்கலாம் -2:282

அனாதைகளின் சொத்தை அவர்களிடம் ஒப்படைக்கும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் – 4:6

நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும் – 4:135, 5:8, 6:152, 16:90

மரண சாசனத்துக்கும் சாட்சிகள் – 5:106

சாட்சிகள் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் – 5:106, 65:2

பெண்களுக்கு எதிராகப் பழிசுமத்தி நான்கு சாட்சிகள் கொண்டு வராதவர்களின் சாட்சியத்தை ஒருக்காலும் ஏற்கக் கூடாது – 24:4

சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் – 5:106-108

மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழிசுமத்தினால் நான்கு சாட்சிக்கு பதிலாக நான்கு சத்தியம் செய்தல் – 24:6-8

பெண்களுக்கு எதிராகப் பழிசுமத்தி விட்டு நான்கு சாட்சிகள் கொண்டுவரா விட்டால் அவர்களுக்கு 80 கசையடி – 24:4

விவாகரத்துக்குக்கும், மீண்டும் சேர்வதற்கும் சாட்சிகள் – 65:2

சாட்சியம் கூற மறுக்கக் கூடாது – 2:282, 65:2, 70:33

கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் – 2:282, 5:106

பொய் சாட்சி கூறுதல் – 2:204, 4:135, 5:8, 5:108, 25:72

சாட்சிகளைக் கலைப்பதும், துன்புறுத்துவதும் கூடாது – 2:282

சாட்சியத்தை மறைத்தல் கூடாது – 2:140, 2:181, 2:283, 3:71, 5:106

சாட்சியத்தை மாற்றிக் கூறக் கூடாது – 2:42, 2:181, 3:71, 4:135

விபச்சாரத்துக்கு நான்கு சாட்சி – 4:15, 24:4, 24:13

ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல் – 4:135

கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சி – 4:6

ஒப்பந்தங்களுக்கு இரண்டு சாட்சிகள் – 2:282

எதிர் சாட்சியம் – 5:107

உடன்படிக்கைகள் (வாக்குறுதி, ஒப்பந்தம், சத்தியம் செய்தல், நேர்ச்சை) அல்லாஹ்விடம் கொடுக்கும் உறுதிமொழியை நிறைவேற்றுதல் 

2:27, 2:40, 3:76,77, 5:7, 5:14, 6:152, 9:111, 13:20, 13:25, 16:91, 16:95, 33:15, 33:23, 48:10

நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது – 2:224, 24:22

வாய் தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் தேவையில்லை, பரிகாரமும் தேவையில்லை – 2:225, 5:89

சமுதாய ஒப்பந்தங்களும் பேணப்பட வேண்டும் – 4:90, 4:92, 8:72, 9:4

ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யச் சொல்ல வேண்டும் – 5:106,107

உடன்படிக்கையை எதிரிகள் முறித்தால் நாமும் முறிக்கலாம் – 9:12, 9:13

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் – 2:226

ஏமாற்றவும், மோசடி செய்யவும் சத்தியம் செய்யக் கூடாது – 16:92, 16:94

வாக்கை நிறைவேற்றுதல் – 2:177, 3:76, 5:1, 7:102, 8:56, 9:111, 13:20, 16:91, 17:34, 23:8, 33:15, 33:23, 48:10, 70:32

சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல் – 58:16, 63:2

அற்ப விலைக்கு உடன்படிக்கையை விற்றல் – 3:77, 16:95

ஒப்பந்தம் செய்த எதிரிகள் நேர்மையாக நடக்கும் வரை நாமும் நேர்மையாக நடக்க வேண்டும் – 9:4, 9:7

மோசடி செய்வார்கள் என்று அஞ்சுவோருடன் உடன்படிக்கை இல்லை – 8:58

குற்றவியல் சட்டங்கள் வெளிப்படையைக் கொண்டு தீர்ப்பளித்தல் வெளிப்படையானதை மட்டுமே பார்க்க வேண்டும் – 4:94

வரம்பு மீறல் கூடாது பழிதீர்க்கும்போதும் வரம்பு மீறுதல் கூடாது – 17:33

மன்னிப்பதே சிறந்தது பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது – 17:33, 42:40, 42:43

விபச்சாரம்

விபச்சாரம் – 4:15, 4:25, 24:2,

கொலை

கொலை – 2:84, 2:92,93, 2:179, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68

மன்னிக்கும் அதிகாரம் கொலைகாரனை மன்னிக்கும் அதிகாரம் கொல்லப்பட்டவனின் குடும்பத்துக்கு உண்டு – 2:178, 17:33

கண்ணுக்குக் கண் உறுப்புச் சேதத்துக்கு உறுப்பு சேதம் – 5:45

அவதூறு

அவதூறு – 4:112, 24:4, 24:6, 24:11, 12,13, 24:16, 24:23, 33:58, 60:12

பழி சுமத்துதல் தான் செய்ததை அடுத்தவன் மேல் போடுபவன் – 4:112

வதந்தி

வதந்தி பரப்புதல் – 4:83

திருட்டு

திருட்டு – 5:38 குழப்பம் குழப்பம் செய்தல் – 5:33 தீமைக்குத் துணை தீமைக்குத் துணை போகக் கூடாது – 5:2 நிரூபிக்கப்படும் வரை ஒருவன் நிரபராதியே குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவன் நிரபராதியே – 24:4, 24:6-8, 24:11-13