Tamil Bayan Points

அன்றைய புத்த பிட்சு, இன்றைய முஹிப்புல்லாஹ்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 17, 2016 by Trichy Farook

தங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது

பணத்துக்காக, பெண்ணுக்காக, புகழுக்க்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ்லிம்களுக்கு, இவை எல்லாம் இருந்து இஸ்லாத்துக்காக இவற்றைத் துறந்த முஹிப்புல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது.]

அல் முஃமின் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த தஃவா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் புத்த மதகுருவும் இந்நாள் அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ் அவர்கள் பேசிய போது..

புத்த மதகுருவாக இருந்த காலத்தில் என்னிடம் ஆசி வாங்க லட்சக்கணக்கில் கொடுத்து காத்திருப்பார்கள்! இதில் மத்திய மந்திரிகள் எல்லாம் அடக்கம்! அவர்களுக்கு எனது காலால் அவர்களது தலையில் மிதித்து ஆசி வழங்குவேன்! அதிலும் புத்த பாரம்பரிய தஙக செருப்பு எனக்கு இருந்தது! அதை அணிந்து செருப்புக் காலால் மிதித்தால் கூடுதல் லட்சங்கள்!

ஆனால் இன்றைக்கு கூட்டத்துக்கு வர என்னிடம் சரியான செருப்பு இல்லாமல் அறுந்து போனதால் கீழ் வீட்டில் உள்ளவரின் இரவல் செருப்பில் நின்று பேசிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இரவல் செருப்பின் மூலம் இஸ்லாம் எனும் தூய பாதையில் நடந்து வந்து இருக்கிறேன்.

தங்கத் தாம்பாளத்தில் தான் சாப்பிடுவேன்! ஆனால் இஸ்லாத்தை ஏற்றவுடன் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள் அங்கேயும் ஒரு தாம்பாளம் வைத்தார்கள்அதில் போய் உட்கார்ந்தேன்! என்னோடு அந்த ஊரில் உள்ள ஏழை பணக்காரர் எனும் பாகுபாடின்றி அனைவரும் கை போட்டு கலக்கிய போது குமட்டியது!

ஆனால் நாளடைவில் எல்லா நிலையிலும் இஸ்லாம் சமத்துவத்தை பேணும் செயலை எண்ணிய போது தங்கத் தாம்பாளத்தை விட எனக்கு இது உயர்ந்ததாக தெரிந்தது.

தீராத வயிற்று வலிக்கு மருந்தாக எனது சிறுநீரை பக்தன் ஒருவனுக்கு வழங்கிய போது நோய் தீர்ந்ததாக ஒரு கோடியை என் காலடியில் வைத்தான்.

குழந்தை இல்லாத பெண்ணை பூஜைக்கு வரச்சொல்லி கணவனின் அனுமதியுடன் எனது உறவின் மூலம் குழந்தை கொடுத்த போது 22 ஏக்கரை என் பெயரில் எழுதி வைத்தாள்!

ஆனால் 5 வயதில் மடத்துக்கு சென்ற நான் 50 வயது வரை சூரியனை பார்ததில்லை எனும் அளவுக்கு ஏசி யில் வாழ்ந்தேன் ! கால் படாத நாடு இல்லை எனுமளவுக்கு உலகை 3 முறை வலம் வந்து விட்டேன்! விமானத்தில் பறந்து கொண்டெ இருந்த எனக்கு இஸ்லாம் ஆகாயத்தில் தான் ஒருவரால் அறிமுகம் செய்யப்பட்டது!

ஆனால் இன்றைக்கு கூட்டம் வருவதற்கு தாமாதமாகி விட்டது ! காரணம் எனது மொபெட் வரும் வழியில் நின்று விட்டது! பெட்ரோல் போட பங்குக்கு உருட்டி சென்றேன்! 50 ரூபாய் மட்டும் தான் இருந்தது! 30 ருபாய்க்கு போட முடியுமா என்றேன் முடியாது என்றார்கள்! 

இன்று எனது பையில் சிறிதும் பணமில்லை ! ஆனால் இதயம் நிறைய இஸ்லாம் இருக்கிறது! அது எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருக்கிறது! தஙகத் தட்டும், பஞ்சணை மெத்தையும், பணமும், மதுவும், மங்கையும் தர முடியாத இன்பத்தை இஸ்லாம் எனக்களித்தது! அசுத்தமான பணத்தை எல்லாம் அங்கேயே விட்டு விட்டு, நிம்மதியுடன் இஸ்லாத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனப் பேசினார். தனது உரையால் அப்பகுதியில் இருந்த மக்களைக் கட்டிப் போட்டார்!

அல்ஹம்துலில்லாஹ்!