Tamil Bayan Points

الكاهن

பயான் குறிப்புகள்: அரபி குறிப்புகள் - 2

Last Updated on September 16, 2020 by Trichy Farook

الكاهن

நாட்டு நடப்பு
பில்­, சூனியம் நீக்குவதாகக் கூறி தொழிலதிபர் மனைவியிடம் ரூ 27 லட்சம் மோசடி, போலீஸ் பொறியில் சிக்கினார் கேரள மந்திரவாதி
ரூ 16 இலட்சம், 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
சென்னை ஜ‏þலை 25 : பில்­, சூனியத்தை நீக்குவாதக் கூறி சென்னை தொழில் அதிபரின் மனைவி பாத்திமாவிடம் ரூ 25 லட்சம் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த மந்திரவாதி அப்துல் ரஹ்மான (எ) வெத்தலைப் பெட்டி தங்கல் (61) கைது செய்யப்பட்டார்.
மந்திரவாதியால் ஏமற்றப்பட்ட பாத்திமா, சென்னை வடபழனி பாம்தார் நகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் ரஹீம் தோல், பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பாத்திமாவின் தங்கை ரஷீதா தாம்பரத்தில் வசித்து வருகிறார். அவருக்கு தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில வசிக்கும் மந்திரவாதி அப்துல் ரஹ்மான் அறிமுகம் கிடைத்தது.
தனது வீட்டில் தோஷத்தை நீக்கக்கோரி மந்திரவாதியிடம் ரூ 38 ஆயிரத்தை ரஷீதா கொடுத்துள்ளார். அதோடு பாத்திமாவின் கணவரது தங்கை நூர்ஜஹானும் மந்திரவாதிக்குப் பணம் கொடுத்துள்ளார்.
மந்திரவாதியைப் பற்றி தனது அக்கா பாத்திமாவிடமும் கூறியுள்ளார் ரஷீதா. இதையடுத்து மந்திரவாதியை பாத்திமா சந்தித்துள்ளார்.
பாத்திமா வீட்டிக்கு யாரோ பில்­, சூனியம் வைத்துள்ளாதவும் அதனால் அவர்களது வீட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்படும் எனவும் மந்திரவாதி கூறியுள்ளார்.
இதனால் பயந்துபோன பாத்திமா, அப்துல் ரஹ்மானை தனது வீட்டிக்கு அழைத்துச் சென்று ரூ 65 ஆயிரத்தைக் கொடுத்து பூஜை செய்துள்ளார்.
இவ்வாறு ஜன18 முதல் ஜ‏þன் 30 வரை அவரிடம் ரூ 25 லட்சமும் 25 பவுன் நகைகளையும் பெற்றுள்ளார் அப்துல் ரஹ்மான். தன்னிடம் இருந்த பணம் நகைளை எல்லாம் கணவருக்குத் தெரியாமல் கொடுத்துள்ளார் பாத்திமா, அதற்கு மேலும் பணம் கேட்டுள்ளார் அப்துல் ரஹ்மான். அப்போது கணவர் ரஹீமிடம் உண்மையைக் கூறினார் பாத்திமா. பின்னர் அப்துல் ரஹ்மானைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரைக் காணவில்லை.
இது குறித்து கமிஷனர் நடராஜிடம் ஜ‏þலை 20 ல் புகார் செய்யப்பட்து. மத்திய குற்றப்பிரிவு போ­ஸ் உதவி கமிஷனர் லட்சுமிநாதன் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்துல் ரகுமானைப் போலீஸார் தேடிய போது சில நாள்களுக்கு முன்பு அப்துல் ரஹ்மானின் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது (அவருக்கு 5 மகன்கள், 4 மகன்கள் உள்ளனர்) தெரியவந்தது. அதன் பின் அவர் தலைமறைவாகி விட்டார்.
அவரைப் பிடிக்க போ­ஸார் நூதன திட்டம் வகுத்தனர். அதன்படி, அப்துல் ரஹ்மானை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு காவலர் தனது வீட்டில் பில்­ சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட அப்துல் ரஹ்மான் அவரை ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். அங்கு சென்று மறைந்திருந்த போ­ஸார், அப்துல் ரஹ்மானைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ16.6 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 25 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி நெல்லை பதிப்பு 27.05.2005
இஸ்லாத்தின் அடிப்படையை தெரியாததால் வந்த வினைதான் இவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. முஸ்­ம்கள் என்று சொல்­க் கொள்பவர்கள் இஸ்லாத்தைப் பற்றியே சரியாகத் தெரியாதவர்களாக உள்ளனர்.
நன்மையும் தீமையும் இறைவன் நாட்டபடிதான் நடக்கிறது என்ற அடிப்படையை கூட விளங்கவில்லை இன்றைய முஸ்­ம்கள். இறைவா! நீ கொடுப்பதை தடுப்பவன் எவனும் இல்லை! நீ தடுப்பதை கொடுப்பவன் எவனும் இல்லை என்ற நபிகளாரின் கூற்றும் இவர்களுக்கு தெரியவில்லை.
பிரச்சனையைத் தீர்க்கிறேன், பிள்ளை பாக்கியத்தை தருகிறேன், குடும்ப சிக்கலை களைகிறேன் என்று ஆ­ம்கள் என்ற போர்வையில் ஏமாற்று பேர்வழிகள் முஸ்­ம்களை நன்றாக ஏமாற்றி வருகின்றன. குறிப்பாக கேரளாவி­ருந்து தங்கள் என்று தங்களை கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வளையில்தான் முஸ்­ம்கள் பெரும்பாலும் விழகின்றனர். ஜின்னை அடக்கி வைத்துள்ளேன் என்ற புருடா விட்டு மக்களின் அறிவு கண்னை கட்டுகின்றனர். இந்த ஏமாற்று பேர்வழிகள் பல லட்சங்களை மக்களிடமிருந்து சுருட்டியுள்ளனர். இவற்றில் ஒன்றுதான் சென்னையில் நடந்த சம்பவம்.
பேய், பிசாசு, பில்­, சூனியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற ஒரு கூட்டமே சுற்றிவருகிறது. இவர்களிடம் சென்றால் பணத்தை இழப்பதோடு ஈமானையும் இழக்க நேரிடும்.
குறிகாரனிடம் சென்று அவன் பேச்சைக் கேட்டு நடந்தால் நம்முடைய நாற்பது நாட்கள் தொழுகையின் நன்மை கிடைக்காமல் போய்விடும். மேலும் திருக்குர்ஆனை மறுத்தவனைப் போன்றும் நாம் ஆகிவிடுவோம். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் குறிகாரர்களிடம் போவதை நேரடியாகவே தடுத்துள்ளார்கள். உண்மையில் முஸ்­ம்களாக இருப்பவர்கள் மந்திரவாதிகள் என்று கூறிக்கொள்வர்களிடம் எச்சரிக்கையாக இருக்க பின்வரும் நபி மொழிகளை படிக்கட்டும்.

4133 حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُمُورًا كُنَّا نَصْنَعُهَا فِي الْجَاهِلِيَّةِ كُنَّا نَأْتِي الْكُهَّانَ قَالَ فَلَا تَأْتُوا الْكُهَّانَ قَالَ قُلْتُ كُنَّا نَتَطَيَّرُ قَالَ ذَاكَ شَيْءٌ يَجِدُهُ أَحَدُكُمْ فِي نَفْسِهِ فَلَا يَصُدَّنَّكُمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமை காலத்தில் குறிகாரனிடம் சென்று வந்தோம். (இதை செய்யலாமா?) என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் குறிகாரனிடம் செல்லாதீர்கள்! என்றார்கள். நாங்கள் சகுனம் பார்ப்பவர்களாக இருந்தோம் என்றேன். அதற்கு அது உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணமே. எனவே அவை உங்களை (எதையும் செய்வதை விட்டும்) தடுத்துவிட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸ‎ýலமீ (ர­), நூல் : முஸ்­ம் (4133)
4137 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً رواه مسلم
யார் குறிகாôரனிடம் சென்று எதையாவது பற்றி கேள்விகேட்டால் நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நபிகளாரின் மனைவியரில் ஒருவர், நூல் : முஸ்­ம் (4137)
9171 حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَوْفٍ قَالَ حَدَّثَنَا خِلَاسٌ عَنْ أَبِي هُرَيْرَةَ وَالْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه احمد
யார் குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை உண்மைபடுத்தினாôல் முஹம்மதுக்கு இறக்கப்பட்டதை (திருக்குர்ஆனை) மறுத்தவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­), நூல் : அஹ்மத் (9171)
2237 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ رواه البخاري
நாயின் விலை விபச்சாரியின் சம்பாத்தியம் குறிகாôரனின் தட்சணை ஆகியவையை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் (ர­), நூல் : புகாரீ (2237)