Tamil Bayan Points

إيجاب الجنة

பயான் குறிப்புகள்: அரபி குறிப்புகள் - 2

Last Updated on September 16, 2020 by Trichy Farook

சொர்க்கத்தை கடமையாக்குபவை
21356 حَدَّثَنَا يَزِيدُ عَنْ هَمَّامٍ عَنْ قَتَادَةَ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ فَهُوَ فِي الْجَنَّةِ أَوْ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ رواه احمد
ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ர­), நூல் : அஹ்மத் (21356),திர்மிதீ(1497)
மனிதரிடம் நல்ல காரியங்கள் இருக்கவேண்டும் என்று கட்டûயிடும் இஸ்லாம் பல விசயங்கள் இருக்கக்கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விசயங்கள் இருக்கக்கூடாது. அவை இருந்தால் அவர் சொர்க்கம் புகமுடியாமல் போய்விடும். அதே நேரத்தில் இந்த மூன்றும் இல்லாமல் போனால் அவர் கண்டிப்பாக சொர்க்கம் போவார். அந்த மூன்று காரியங்கள்: 1. தற்பெருமை, 2.மோசடி, 3.கடன்
தற்பெருமை
எவனிடம் தற்பெருமை குடிகொண்டுவிடுமோ அவன் அழிவின் விழிம்பிக்கு போய்விட்டான் என்று கூறலாம். அவனிடம் நற்காரியங்கள் அனைத்து நீங்குவதற்கும் நல்செயல்கள் வராமல் இருப்பதற்கும் இந்த தற்பெருமை காரணமாக அமைந்துவிடும்.
تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ(83) سورة القصص
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. (அல்குர்ஆன் 28:83)
பூமியில், நான்தான் பெரியவன் என்று எண்ணி நடப்பவனுக்கு மறுமையில் சொர்க்கம் என்ற வீடு உறுதியாக கிடையாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். இந்த எண்ணம் எவரிடம் குடிகொண்டுவிடுமோ அவர்கள் சொர்க்கம் செல்வதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்துவிடும். இந்த தற்பெருமை இல்லையோல் அவர் சொர்க்கம் செல்வது இலகுவாகிவிடும்.
கடுகளவும் இருக்கக்கூடாது
132 حَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ قَالَ مِنْجَابٌ أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ وَلَا يَدْخُلُ الْجَنَّةَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ كِبْرِيَاءَ رواه مسلم
தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரத்தில் நுழையமாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத் (ர­), நூல் : முஸ்­ம் (148)
பெருமை இறைவனுக்கு மட்டுமே உரியது
பெருமை அடிப்பது என்பது இறைவனுக்கு மட்டுமே உரியது. அதற்கு தகுதியுள்ளவன் இறைவன் மட்டுமே! இறைவனுக்கு மட்டுமே உரித்தான பண்பை எவரும் செய்யத் துணிந்தால் அவர் இறைவனால் வேதனை செய்யப்படுவார்.
4752 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ عَنْ أَبِي مُسْلِمٍ الْأَغَرِّ أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ قَالَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِزُّ إِزَارُهُ وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ فَمَنْ يُنَازِعُنِي عَذَّبْتُهُ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன்.
அறிவிப்பவர் : அபூஸயீத் (ர­), நூல் : முஸ்­ம் (5114)
எனவே இறைவனுக்கு மட்டும் செய்யக்கூடிய இந்த பெருமை விட்டு விட்டு பணிவு என்ற நற்பண்பை கடைபிடிக்கவேண்டும்.
2. மோசடி
சொர்க்கம் தடைசெய்யப்படுவதற்கு காரணமாக திகழும் இரண்டாவது காரணம் மோசடி. இந்த தன்மையி­ருந்து விடுபட்டவர் சொர்க்கம் செல்லுவர். இந்த மோசமான காரியத்தை செய்துவருபவர் சொர்க்கம் புகமுடியாது.
இந்த மோசடித் தன்மை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இது இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனின் தன்மையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
33 حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ رواه البخاري
பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடிசெய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­), நூல்கள் :புகாரி (33),முஸ்­ம் (107)
மோசடி என்ற மோசமான காரியத்தை தொடர்ந்து செய்துவரும் ஒருவர் அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் அவரிடம் நயவஞ்கத்தன்மையில் ஒன்று இருந்து கொண்டே இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَلَامَاتِ الْمُنَافِقِ ثَلَاثَةٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ قَيْسٍ أَبُو زُكَيْرٍ قَالَ سَمِعْتُ الْعَلَاءَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يُحَدِّثُ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ وَإِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ … رواه مسلم
நயவஞ்கனின் அடையாளங்கள் மூன்றாகும்… அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்­ம் என்று கூறிக் கொண்டாலும் சரியே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­), நூல் : முஸ்­ம் (109)
மோசமான கூட்டம் மோசடிசெய்யும்
2651 حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُو جَمْرَةَ قَالَ سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ قَالَ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ قَالَ عِمْرَانُ لَا أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلَاثَةً قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ وَيَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ وَيَنْذِرُونَ وَلَا يَفُونَ وَيَظْهَرُ فِيهِمْ السِّمَنُ رواه البخاري
உங்களுக்கு பிறகு ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன்வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டாôர்கள். அவர்களிடையே பருமானயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ர­), நூல் :புகாரி(2651)
ஈமான் இருக்காது
மோசடி செய்பவர் மோசடி செய்யும் போது ஈமான் இல்லாமல் போய்விடும் என்று கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
86 حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عِمْرَانَ التُّجِيبِيُّ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولَانِ قَالَ أَبُو هُرَيْرَةَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ ….. وَلَا يَغُلُّ أَحَدُكُمْ حِينَ يَغُلُّ وَهُوَ مُؤْمِنٌ فَإِيَّاكُمْ إِيَّاكُمْ رواه مسلم
மோசடி செய்பவன் மோசடி செய்யும் போது அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை.(இவற்றி­ருந்து விலகிக் கொள்ளுமாறு) உங்களை நான் எச்சரிக்கிறேன்; உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர­), நூல் : முஸ்­ம்(103)
சொர்க்கத்தை தடைசெய்யும் இந்த மோசடி என்ற மோசமான காரியத்தை விட்டும் விலகி சொர்க்கத்தை கடமையாக்கிக் கொள்ளவேண்டும்.
கடன்
சொர்க்கத்திற்கு செல்ல முடியாமல் போவதற்கு கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காமல் அதை திருப்பிக் கொடுக்கப்பதற்குரிய செல்வத்தை சேர்க்காமலும் இறந்துவிடுவதாகும். இந்த கடன் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மனித உரிமைகள் மீறு விசயத்தில் கடன் முக்கிய இடத்தை வகிக்கிறது. வசதியில்லாத நிலையில் அல்லது முக்கியத் தேவைக்காக வாங்கும் கடன்கள் பெரும்பாலும் குறித்த காலத்தில் கொடுப்பதில்லை. மேலும் சிலர் கடனை வாங்கி தலைமறைவாகிவிடுகின்றனர். இதனால் கடன் கொடுத்தவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு சரியான தண்டனையாக சொர்க்கம் தடைசெய்யப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் கடன்பட்டவர் இறந்து போனால் அவருடைய கடனை நிறைவேற்றும் அளவுக்கு செல்வத்தை விட்டுச் சென்றால் மட்டுமே தொழுகை நடத்துவார்கள். இல்லையெனில் அவர்கள் தொழுகை நடத்தாமல் நபித் தோழர்களை நடத்தச் செல்வார்கள்.
கடனாளிக்கு நபிகளார் தொழுவிக்கவில்லை
2291 حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِجَنَازَةٍ فَقَالُوا صَلِّ عَلَيْهَا فَقَالَ هَلْ عَلَيْهِ دَيْنٌ قَالُوا لَا قَالَ فَهَلْ تَرَكَ شَيْئًا قَالُوا لَا فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَلِّ عَلَيْهَا قَالَ هَلْ عَلَيْهِ دَيْنٌ قِيلَ نَعَمْ قَالَ فَهَلْ تَرَكَ شَيْئًا قَالُوا ثَلَاثَةَ دَنَانِيرَ فَصَلَّى عَلَيْهَا ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ فَقَالُوا صَلِّ عَلَيْهَا قَالَ هَلْ تَرَكَ شَيْئًا قَالُوا لَا قَالَ فَهَلْ عَلَيْهِ دَيْنٌ قَالُوا ثَلَاثَةُ دَنَانِيرَ قَالَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ وَعَلَيَّ دَيْنُهُ فَصَلَّى عَلَيْهِ رواه البخاري
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர் கடனாளியா? என்று கேட்போது நபித் தோழர்கள் இல்லை என்றனர். ஏதேனும் (சொத்தை) இவர் விட:டுச் சென்றிருக்கிறாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது இல்லை என்றனர். நபி (ஸல்) அவர்கள் அவருக்காக தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவர் கடனாளியா? என்று கேட்டபோது ஆம் எனக் கூறப்பட்டது. இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது. மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றியிருக்கிறார் என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபித் தோழர்கள் கூறினர். இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, இல்லை என்றனர். இவர் கடனாளியா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார் என்று நபித் தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், உங்கள் தோழர்களுக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றனர். அப்போது அபூகதாதா (ர­), இவரது கடனுக்கு நான் பொறுப்பு, அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர் :ஸலமா (ர­), நூல் :புகாரி(2289)
அனைவருக்கும் தொழுகை நடத்தி நபி (ஸல்) அவர்கள், கடனாளிக்கு மட்டும் தொழுவிக்க மறுத்தது, கடன் வாங்கி அதை தராமல் இறந்து விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்த்துவதற்குத்தான்.
மறுமையில் நன்மைகன் பிடுங்கப்படும்
கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் இறந்துவிட்டால் கடன் கொடுத்தவர் மறுமைநாளில் இறைவனிடம் முறையிடும் போது கடன் வாங்கியவரின் நன்மைகளை எடுத்து கடன் கொடுத்தவருக்கு வழங்கப்படும்.
4678 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுத்துத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள், யாரிடம் வெள்ளிக்காசோ பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர் என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருபபார். ஒருவர் மீது அவதூறு சொல்­யிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளி­ருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும். இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளி­ருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால்(அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களி­ருந்து சில எடுக்கப்பட்டு இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறிப்படுவார்.(அவரே திவாலாகிப்போனவர்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­), நூல் :முஸ்­ம் (5037)
கடன் வாங்கியவர் அதை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற மனித உரிமையை மீறினால் மறுமை நாளில் இவர் எவ்வளவு பெரிய நன்மைகளை செய்திருந்தாலும் அவருடைய நன்மைகள் கடன்கொடுத்தவருக்கு வழங்கப்பட்டு இவர் ஒன்றும் இல்லாத நிலைகூட ஏற்படலாம், இதனால் நரகத்திற்கு செல்லும் நிலைகூட ஏற்படலாம். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் கடனை விட்டும் பாதுகாப்பு தேடுவார்கள்.
2397 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ ح و حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي أَخِي عَنْ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ وَيَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنْ الْمَغْرَمِ قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் துஆ செய்யும் போது இறைவா! பாவத்தி­ருந்தும் கடனி­ருந்தும் உன்னிடம் பாதுப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­), நூல் :புகாரி(2397)
பொய் சொல்லத் தூண்டும்
கடன் வாங்குதால் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் இன்னொரு பாவமும் சேர்ந்து கொள்கிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்புத் தோடுவார்கள்.
2397 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ ح و حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي أَخِي عَنْ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ وَيَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنْ الْمَغْرَمِ قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் துஆ செய்யும் போது இறைவா! பாவத்தி­ருந்தும் கடனி­ருந்தும் உன்னிடம் பாதுப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன்படுவதி­ருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­), நூல் :புகாரி(2397)
தற்பெருமை, மோசடி, கடன் என்ற மூன்று காரியங்களி­ருந்து ஒருவர் விலகி இருப்பதால் நற்செயல்கள் நம்மிடம் வந்து சேர்வதுடன், சொர்க்கத்து உரியவர்களாகவும் நாம் ஆகலாம். எனவே நம் செயல்பாடுகளில் இந்த மூன்று காரியங்களையும் முற்றிலுமாக விலக்கிவைப்போம்.