Tamil Bayan Points

Tag: islambrowser

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே! அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான். அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் […]

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா? அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது. பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்களைத் தங்களுடைய இதழில் எழுதியிருந்தனர். அதற்கு ஏகத்துவம் […]

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே நிரூபித்த அமெரிக்க இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் இறைவனின் மார்க்கமேநிரூபித்த அமெரிக்க இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்! மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். இந்த நோய் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் தொழுகையாளிகளாக உள்ள முஸ்லிம்களை தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50மூ கட்டுப்படுத்தலாம் என […]

தாடியின் நன்மைகள்

தாடியின் நன்மைகள் சத்திய மார்க்கம் – தாடியின் நன்மைகள் : அறிவியல் சான்றுகள் – இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள் – டாக்டர் த.முஹம்மது கிஸார் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட சில இளங்கலை மாணவர்களிடம், தாடி […]

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க […]

நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்!

நன்மைகளை நாசமாக்கும் நச்சுப்பண்புகள்! அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான, அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். எந்தளவிற்கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவது தான் முக்கியம் என்பதால், தடுமாறிக் கொண்டிருக்கின்ற ஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதே […]

சிறப்பிற்குரியோர் யார்….?

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! சிறப்பிற்குரியோர் யார் என்ற தலைப்பில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய நற்போதனைகளை இந்த உரையில் காண்போம்.. சிறப்பிற்குரியோர் யார்….? இந்த உலகத்திலே மனித சமுதாயம் படைக்கப்பட்ட உன்னதமான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ ‘ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்க்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’ (அல்குர்ஆன்: 51:56) மேற்கண்ட வசனம் இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே […]

நல்லவர்கள் கஷ்டப்படுவதும் தீயவர்கள் சுகமாக வாழ்வதும்

நல்லவர்கள் கஷ்டப்படுவதும் தீயவர்கள் சுகமாக வாழ்வதும் உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும், உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்று சொன்னால் இந்த உலகத்திலேயே நாம் பார்க்கலாம் நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள். தீயவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கிறோம். நேர்மையாக, சரியான அடிப்படையில் இருக்கக் கூடியவன் ஏழ்மையில் வாடுவான். லஞ்சம் வாங்கி மோசடி செய்து ஹராமான அடிப்படையில் வியாபாரம் செய்பவன் செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். நேர்மையாக […]

மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதரும் மாமன்னருமான சுலைமான் நபி அவர்கள் எவ்வாறு மரணத்தை தழுவினார்கள் என்பதை இந்த உரையில் காண்போம்… மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான் உலகத்தில் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்களில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற தூதர்கள் தாவூத் (அலை) அவர்களும், அவரது மகன் சுலைமான் (அலை) அவர்களும் ஆவர். அவ்விரு தூதர்களுக்கும் அளித்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ […]

களை பறிப்போம் பயிர் காப்போம்

களை பறிப்போம் பயிர் காப்போம் தவ்ஹீது பிரச்சாரத்தில் கால் பதித்து கால் நூற்றாண்டைத் தாண்டி விட்டாலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை நாம் கண்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அல்லாஹ்வின் கிருபையால் இந்த இயக்கம் ஆல் போல் தழைத்து விட்டது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பேரியக்கம் கிளைகளைக் கண்டிருக்கின்றது. இப்படி ஒரு வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்ற அதே வேளையில் ஒரு பெருங்கவலையும் நம்மை ஆட்கொள்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் சர்வ […]

ஒழுக்க சீலர் நபிகளார்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அனைத்து விஷயத்திலும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அதேப்போன்று ஒழுக்கத்திலும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். நபிகள் நாயகம் அவர்கள் ஒழுக்க சீலராக வாழ்ந்து காட்டினார்கள். இதோ அவர்களின் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம். ஒழுக்க சீலர் நபிகளார் உலக மக்களை சீர்திருத்த ஏராளமான தலைவர்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களின் கொள்கைளும் கோட்பாடுகளும் அறிவுரைகளும் மக்களின் மனதில் இடம்பெறவில்லை. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரபுலுகில் […]

தளராத உள்ளம்

தளராத உள்ளம் إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا ، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ ، فَحَدِّثُونِي مَا هِيَ؟ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللهِ: وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ ، فَاسْتَحْيَيْتُ. ثُمَّ قَالُوا: حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: هِيَ النَّخْلَةُ ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது […]